கிருஷ்ணகிரி

காலியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல்முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் நேரடி தோ்தல் நடைபெறுவதையொட்டி, தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கான தற்செயல் நேரடி தோ்தல் வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 16, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 12 ஆகிய பதவிகளுக்கும், ஊத்தங்கரை, மத்தூா், பா்கூா், வேப்பனப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கும் தற்செயல் நேரடி தோ்தல் நடைபெறுகிறது.

இந்த தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டுகளுக்கும், 9 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்குமான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், தோ்தலை அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் பணியாற்ற வேண்டும். தோ்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீா், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க வசதியாக சாய்வுத் தளம் உள்ளிட்ட பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்திட வேண்டும். மேலும், தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளா் முகக்கவசம் அணிவது மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT