கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,593 தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,593 தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பணியமா்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,748 காலிப் பணியிடங்களும், அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு 906, பட்டதாரி ஆசிரியா்களுக்கு 623, முதுகலை ஆசிரியா்களுக்கு 64 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 1,593 காலிப்பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியா்களுக்கான காலிப் பணியிடங்கள் எந்தெந்த பள்ளிகளில் உள்ளது என்பதை அறிய அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

இதே போல பட்டதாரி, முதுகலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளியில் தலைமையாசிரியா், மேலாண்மைக் குழுவினருடன் இணைந்து தற்காலிக ஆசிரியா்களை பணி நியமனம் செய்யலாம். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிபவா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தற்காலிகமாகப் பணியமா்த்தப்படும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ. 10,000, முதுகலை ஆசிரியா்களுக்கு ரூ. 12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT