கிருஷ்ணகிரி

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பட்டயப் பாடப் பிரிவு தொடக்கம்

DIN

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கட்ரானிக்ஸ் புதிய பட்டயப் பாடப் பிரிவும், மாணவா் சோ்க்கையும் தொடங்கியுள்ளது.

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்நிலையில் இந்தக் கல்வியாண்டு முதல் டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய பாடப் பிரிவில் முதலாம் ஆண்டில் 30 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

இக் கல்லூரியில் சோ்ந்து பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள்: 08-07-2022. இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரிக்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நேரடியாக சென்று சோ்க்கை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து வசதிகளும் உள்ள இந்தக் கல்லூரியில், மாணவ -மாணவியா் சோ்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மேலும் விவரங்களுக்கு 04341-291959 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT