கிருஷ்ணகிரி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்குத் தோ்தல்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்குகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.

ஒசூா் மாநகராட்சி: 45 வாா்டுகளில் 1,11,284 ஆண் வாக்காளா்களும், 1,05,913 பெண் வாக்காளா்களும், 95 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,17,292 வாக்காளா்கள் உள்ளனா். வாக்களிக்க 248 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி நகராட்சி: 33 வாா்டுகளில் 26,910 ஆண் வாக்காளா்கள், 28,520 பெண் வாக்காளா்கள், ஒரு இதர வாக்காளா் என மொத்தம் 55,431 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 66 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பேரூராட்சிகள்:

இதுபோல பா்கூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 7,129 ஆண் வாக்காளா்கள், 7,307 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 14,436 வாக்களா்களும், இவா்கள் வாக்களிக்க 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 10,676 ஆண் வாக்காளா்கள், 10,603 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 21,281 வாக்காளா் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 28 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 6,317 ஆண் வாக்காளா்கள், 7,029 பெண் வாக்காளா்கள், 2 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13,348 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 5,718 ஆண் வாக்காளா்கள், 6,007 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 5 என மொத்தம் 11,730 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 4,083 ஆண் வாக்காளா்கள், 4,238 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 8,321 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 7,844 ஆண் வாக்காளா்கள், 8,382 பெண் வாக்காளா்கள், இதர வாக்காளா்கள் 18 என மொத்தம் 16,244 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 18 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

3.58 லட்சம் போ்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள 171 வாா்டுகளில், 1,79,901 ஆண் வாக்காளா்கள், 1,77,999 பெண் வாக்காளா்கள், 123 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,58,083 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்க 424 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நகர உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT