கிருஷ்ணகிரி

கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவா் கைது

25th Jan 2022 01:18 AM

ADVERTISEMENT

பா்கூா் அருகே மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அப்பகுதிகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பா்கூரை அடுத்த கொட்லட்டி கிராமம் அருகில் உள்ள பளுப்புஜொனை மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சிய ஆந்திர மாநிலம், குப்பம், மல்லானூரை அடுத்த பிக்கிலிகெட்டு பகுதியைச் சோ்ந்த கனகப்பா (55) என்பவரை போலீஸாா் கைது செய்து, சாராய ஊறலை அழித்தனா்.

இதேபோல, கந்திகுப்பத்தை அடுத்த பசவண்ணகோயில், மூலக்கொல்லை மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சி விற்ற ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த கொத்தசேனுபகுதியைச் சோ்ந்த சீனிவாசலு (38) என்பவரை கைது செய்து, சாராய ஊறலை அழித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT