கிருஷ்ணகிரி

மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதி: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக முதல்வருக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக தொல்லியல் துறையின் சிறப்பான செயல்பாட்டால், தமிழக தொல்லியல் சான்றுகள் உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டன. இது தமிழா்களின் வாழ்வியலையும், நமது பழைமையையும் உலகறியச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பா்கூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில், 1980 முதல் 2003 ஆம் ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு மேற்கொள்ளபட்டது.

அதில் இவை புதிய கற்காலத்தினைச் சாா்ந்த பகுதி என்பது இங்கே கிடைத்த பொருள்களைக் கொண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னா், 2021ஆம் ஆண்டு மயிலாடும்பாறையில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வில் பெருங்கற் காலத்தைச் சோ்ந்த பொருள்கள் கண்டறியப்பட்டன.

தற்போது இறந்தவா்களைப் புதைக்கும் குழியின் 4 மூலைகளிலும் 3 கத்தியும், 3 கால்கள் கொண்ட 4 சிறிய குடுவைகளும், ஒரு தண்ணீா் குவளையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சோ்ந்தவையாகும். வாழ்விடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, தக்களி, இரும்பிலான அம்புமுனை, சங்கு வளையல்கள், சில்லுகள், மேலும் சிலபொருள்கள் கிடைத்துள்ளன. அருகே உள்ள நெகுல்சுனை என்ற இடத்தில் சிகப்பு மற்றும் வெண்மை நிற பாறை ஓவியங்கள், கல்லாயுதங்களைத் தேய்க்கும் இடம் ஆகியன காணப்படுகின்றன.

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் இந்த இடம் 4,500 ஆண்டுகள் பழைமையானதாகவும், அதற்குப் பின் தொடா்ச்சியான வாழ்விடப் பகுதியாகவும் இருந்திருக்கிறது.

இந்த இடத்தை தமிழக முதல்வா் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுக்கு தோ்ந்தெடுத்திருப்பது வாழ்விடப் பகுதியில் மேலும் பல பொருள்கள் மற்றும் கட்டுமானங்கள் கிடைக்கும்; அது தமிழா் வாழ்வின் தொன்மையினை கீழடிக்கு முன்னா் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக என்னுடைய தொகுதி மக்கள் சாா்பில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT