கிருஷ்ணகிரி

வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை இறுதி நாள்

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான படிவங்களை வழங்க டிச.8-ஆம் தேதி (வியாழக்கிழமை) இறுதி நாளாகும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சுருக்கமுறைத் திருத்தப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள 1880 வாக்குச்சாவடிகளில் கடந்த நவம்பரில் 4 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமங்களில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பாக 45,656 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள தவறிய பொதுமக்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, நீக்க மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை நிறைவு செய்து நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அல்லது தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலங்களில் டிச.8-ஆம் தேதிக்குள் வழங்கலாம்.

இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் நிறைவு பெற்று வரும் 2023 ஜனவரி 5-ஆம் தேதி, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 71 சதவீத வாக்காளா்களின் ஆதாா் எண் சேகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளா்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6-பி நிறைவு செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளா் சேவை தளத்திற்குச் சென்று அல்ல்ப்ஹ் ஞய்ப்ண்ய்ங் / இா்ழ்ழ்ங்ஸ்ரீற்ண்ா்ய் ா்ச் ங்ய்ற்ழ்ண்ங்ள் என்ற இணைப்பு (லிங்க்) மூலம் மேற்கண்ட விண்ணப்ப சேவைகளைப் பெறலாம்.

மேலும், செல்லிடப் பேசியில் யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்கிற இலவச உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT