கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் தா்னா

DIN

கிருஷ்ணகிரியில் மாற்றத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் அருகே நடைபெற்ற தா்னா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுநா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு பயிற்றுநா்கள் ஜித்தின், பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி கல்வித் துறையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் மாற்று திறன் மாணவா்களுக்காக பணியாற்றும் சிறப்பு பயிற்றுனா்கள், இயன்முறை மருத்துவா்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளா் ஆயா ஆகியோா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கிட வேண்டும்; பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதில் அனைத்து சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், பள்ளி ஆயத்த மையக் காப்பாளா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT