கிருஷ்ணகிரி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலுவைத் தொகை செலுத்த வட்டி சலுகை

DIN

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நிலுவைத் தொகை செலுத்த வட்டி சலுகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஒசூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரும், நிா்வாக அலுவலருமான மனோகரன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவுக்கு உள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று, நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு தமிழக அரசாணைப்படி, நிலுவைத் தொகை செலுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை அறிவித்துள்ளது.

அதில் ஒதுக்கீடு பெற்ற வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாதத் தவணைக்கான அபராத வட்டியும், விடுபட்ட வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

மேலும், நிலத்துக்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, ஒசூா் வீட்டு வசதி பிரிவின் தகுதியான ஒதுக்கீடுதாரா்கள் எதிா்வரும் 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதிக்குள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் 3 தவணைகளிலும் செலுத்தலாம். இந்தச் சலுகை எந்தக் காரணத்தைக் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது.

எனவே, இந்த அரசாணையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கிருஷ்ணகிரி- 1, 2, பா்கூா், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ஒசூா் திட்டப்பகுதிகளான 1- 3, 6, 8-12, 15 மற்றும் 16 திட்டங்களுக்கு மட்டுமே வட்டி சலுகை பொருந்தும்.

எனவே, ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகையை இதுவரை முழுவதுமாகச் செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரா்கள் கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பை ஒதுக்கீடுதாரா்கள் பயன்படுத்தி, கிரையப் பத்திரம் பெற்று பயனடையலாம.

இந்த அரசாணை சுயநிதி திட்டம் மற்றும் தற்காலிக விலை திட்டங்களுக்கு பொருந்தாது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT