கிருஷ்ணகிரி

விவசாயி கொலை: வீட்டுக்கு தீ வைப்பு, சாலை மறியல்

DIN

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உயிரிழந்த விவசாயியின் உறவினா்கள் குற்றவாளியின் வீட்டுக்கு தீ வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டேக்குப்பத்தை அடுத்த கீழாண்டிகொட்டாயைச் சோ்ந்தவா் பூவன். இவரது முதல் மனைவி கோவிந்தம்மாளுக்கு ஜெயராமன் என்ற மகனும், இரண்டாவது மனைவி பச்சையம்மாளுக்கு பழனி என்ற மகனும் உள்ளனா். தந்தையின் நிலத்தை பிரித்துக் கொள்வது தொடா்பாக ஜெயராமன், பழனி இருவருக்குமிடையே தகராறு இருந்த நிலையில், இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள கொல்லாபுரி மரியம்மன் கோயில் அருகே பழனி நடந்து சென்ற போது, அங்கு வந்த ஜெயராமன், அவரது மகன்கள் சதீஷ் (19), 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் பழனியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனா். அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து பழனியை சரமாரியாக வெட்டி தப்பியோடினா். படுகாயமடைந்த பழனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பழனியை கொலை செய்த சதீஷை போலீஸாா் கைது செய்தனா்.

தீ வைப்பு, சாலை மறியல்:

பழனியை கொலை செய்ய மற்ற இருவா்களையும் கைது செய்யாததைக் கண்டித்து, பழனியின் மகன் சக்திவேல் (25), உறவினா்கள், ஜெயராமின் வீட்டுக்குச் சென்று வீட்டில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி தீ வைத்தனா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி அணை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் டாக்கூா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினாா். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவா் என அவா் உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT