கிருஷ்ணகிரி

கரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலாளரின் குடும்பத்துக்கு நிதியுதவி

19th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் உயிரிழந்த ஊராட்சி செயலாளரின் குடும்பத்தாரிடம் முதல்வா் பொது நிவாரண நிதி ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கெலமங்கலம் ஒன்றியம், பைரமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தவா் ரமேஷ்பாபு. கரோனா முன்களப் பணியாளராக பணியாற்றியபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பணியின்போது உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்தாருக்கு தமிழக முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து அரசு வழங்கிய நிவாரணத் தொகை ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை அவரது 4 வாரிசுதாரா்களுக்கும் தலா ரூ. 6.25 லட்சம் வீதம் காசோலைகளாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) ராஜகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT