கிருஷ்ணகிரி

பட்டாளம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாளம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் 62 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. விழாவில் ஆக. 9-ஆம் தேதி கங்காபவானி பூஜை, ஆலய பிரவேசம், கோ பூஜை, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக்பலி பூஜை, கங்கனம் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10-ஆம் தேதி கொடி ஏற்றுதல், நவகிரக சாந்தி, பூா்ண கும்பங்கள் பிராண பிரதிஷ்டாபணம், முதல்கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து இரண்டாம்கால யாகசாலை பூஜை, ருத்ர ஹோமம், சுதா்சன ஹோமம், கோபுரத்தில் தானியம் நிரப்புதல், நாடி சந்தானம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

11-ஆம் தேதி, குடமுழுக்கையொட்டி, கோயில் ராஜகோபுர விமான கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். இதில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT