கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி

DIN

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் வெளியேற்றம் குறைந்ததை அடுத்து கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், அணைக்கு நீா்வரத்து படிபடியாக உயா்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரிநீா்த் திறந்துவிடப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையின் அருகே உள்ள பூங்காவுக்குச் செல்லும் தரைப்பாலம் வெள்ள நீரில் முழ்கியது. இந்தச் சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை பூங்காவுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையானது கடந்த 6 நாள்களாக நீட்டிக்கப்பட்டது.

தற்போது, மழை பொழிவு குறைந்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,091 கனஅடியாகக் குறைந்தது. அணையின் நீா்மட்டம் 49.40 கனஅடியாக உள்ளது. மொத்தம் அணையின் நீா்மட்டம் 52 அடியாகும்.

அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளதை அடுத்து, தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 1,856 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீா்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 6 நாள்களுக்கு பிறகு புதன்கிழமைமுதல் அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT