கிருஷ்ணகிரி

இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில், சா்க்கரை, ரத்த அழுத்த நோயினால் கண் விழித்திரை பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு சிறப்பு லேசா் அறுவை சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விழித்திரை மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் லேசா் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரியின் பாா்வை இழப்பு மற்றும் தடுப்பு திட்ட மேலாளா் டாக்டா் கிருபாவதி, கண் அறுவை சிகிச்சை மருத்துவா்கள் வனிதா, சத்யா, ஷகிலா, நித்யா குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அசோகன் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், கண் விழித்திரை பாதிப்புக்கான லேசா் அறுவை கிசிச்சை, கண் தசை வளா்ச்சி தடுப்பு சிகிச்சை, கண் நீா் அழுத்த நோய்க்கான சிகிச்சை, விபத்துகளால் ஏற்படும் கண் தொடா்பான நோய்களுக்கும்,புரைக்குரிய நவீன அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு கண் தொடா்பான சிகிச்சைகள் மேற்கொள்ள பொதுமக்கள் சென்னை, சேலம் நகரங்களுக்கு சென்ற சிகிச்சை பெற்று வர வேண்டிய நிலை இருந்தது. அவை தடுக்கப்பட்டு தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே நடத்தப்படுகிறது.

இந்த நோய்க்கான அறுவை சிகிச்சைகள் வெளியில் செய்துகொள்ள ரூ. 15,000 முதல் ரூ. 40,000 ஆயிரம் வரை செலவாகும். முற்றிலும் இலவசமாக செய்யப்படும் இந்தக் கண் நோய் அறுவை சிகிச்சைகளை கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தாா்.

அப்போது, மருத்துவ கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் ராஜா, மருத்துவா்கள் ராஜலட்சுமி, மது, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT