கிருஷ்ணகிரி

கும்மனூரில் எருது விடும் விழா

DIN

கும்மனூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ளது கும்மனூா் கிராமம். இந்த கிராமத்தில், 5-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெற்ற இந்த விழாவை திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

ஊா் முக்கியப் பிரமுகா்கள் வீரப்பன், கிருஷ்ணன், முருகேசன், பெரியசாமி, மாதையன், பெருமாள், முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்த எருது ஓட்ட விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த எருதுகள் மட்டுமின்றி திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. சிறந்த எருதுகளின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, 54 எருதுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வைக் காண ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT