கிருஷ்ணகிரி

இன்னுயிா் காப்போம் திட்டத்தில்அதிகாரிகள் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் ‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ‘இன்னுயிா் காப்போம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதியில் அதிக விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள கந்திகுப்பம், அவதானப்பட்டி, ராயக்கோட்டை மேம்பாலம், சுங்க வசூல் மையம், குருபரப்பள்ளி திம்மாபுரம், சூளகிரி, மேலுமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை அலுவலா்கள் விபத்துகளைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுப் பணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தன், துணைக் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளா்கள் மாணிக்கம், அன்புச்செல்வன், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப் பொறியாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் சாலைகளில் எந்தெந்த பகுதியில் புதிதாக அறிவிப்புப் பலகைகள், சிக்னல்களை வைக்க வேண்டும் என ஆய்வு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT