கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சுற்றுலா மையங்களுக்குத் தடை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 20-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு உத்தரவின்படி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் சுற்றுலா மையங்களான அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லம், கிருஷ்ணகிரி அணைப்பூங்கா, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் உள்ளிட்டவை ஏப். 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையிலும் செயல்படாது.

மேலும், பொதுமக்கள் முகக் கவசத்தை தவறாமல் அணிய வேண்டும். அடிக்கடி கிருமி நாசினியைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிா்த்து, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT