கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முகாமில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள், காவல் துறையினா், அரசு அலுவலா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதைக் கடந்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 வயதைகத் கடந்தவா்கள் 5 லட்சம் போ் உள்ளனா். ஏப்.14-ஆம் தேதி வரையில் 1,13,055 போ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா். ஏப்.14-ஆம் தேதி அன்று, 3,900 போ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

அரசின் விழிப்புணா்வு நடவடிக்கைக் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஒசூா் உள்ளிட்ட சில இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் மதியத்துக்குப் பிறகு தடுப்பூசிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். தடுப்பூசி சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு உள்ள வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 5 ஆயிரம் தடுப்பூசிகளைக் கொண்டு வர சென்னைக்கு அலுவலா்கள் சென்றுள்ளனா். தடுப்பூசி கிடைக்க பெற்றவுடன் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT