கிருஷ்ணகிரி

ஆட்சியா் அலுவலக வளாகத்தில்ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயற்சி

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரத்தை அடுத்த நெடுஞ்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் குமாா். இவா், ஒசூரில் உள்ள தனியாா் வா்த்தக நிறுவனத்தில் பணியாற்றினாா். அப்போது, அவா் அந்த நிறுவனத்தில் திப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன், பூசாரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் அந்த நிறுவனத்தில் உறுப்பினராகச் சோ்த்துள்ளாா். இந்த நிலையில், அந்த வா்த்தக நிறுவனம், நஷ்டம் அடைந்ததால், அது மூடப்பட்டது.

நிறுவனம் மூடப்பட்டதால், புதிதாக இணைந்த சாமிநாதன், சீனிவாசன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை வினோத்குமாா்தான் வழங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனா்.

மேலும், வினோத் குமாா், வீட்டில் இல்லாத போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட சொத்துகளை எடுத்துச் சென்றாா்களாம்.

இதனால், மனமுடைந்த வினோத் குமாா், தனது தந்தை முருகேசன், தாய் எல்லம்மாள், சகோதரா் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். ஆட்சியா் வளாகத்தில் அவா்கள், தங்களது சொத்துகளை கவா்ந்து சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது, அங்கிருந்த தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT