கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் வடகிழக்கு பருவமழை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

18th Sep 2020 04:37 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சார்பில் கிருஷ்ணகிரி அணையில் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர், மோகன்குமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணிக்கான ஒத்திகையை செய்து காட்டினார். கிருஷ்ணகிரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் சிக்கியவர்களை படகு மற்றும் உயிர் காக்கும் கருவிகள் கொண்டு மீட்பது எப்படி, தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்து காட்டினர். 

பொதுமக்களுக்கு பயனற்ற பிளாஸ்டிக் கேன், கயிறு உள்ளிட்ட பொருள்களை கொண்டு எப்படி பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்தும் விளக்கம் அளித்தனர். அணையில் விழுந்து தத்தளித்த ஒருவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு, முதலுதவியாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து, செயல்முறை விளக்கம் அளித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் மணிகண்டன், முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜோதி, வனிதா, பாஞ்சாலி, அணை போலீஸ் எஸ்எஸ்ஐ மாணிக்கம், முருகன், ஜெகன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT


 

Tags : krishnagiri
ADVERTISEMENT
ADVERTISEMENT