கிருஷ்ணகிரி

ஒசூா் பேருந்து நிலையத்தில் விடியோ கேமரா திருட்டு

DIN

ஒசூரில் பேருந்தில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள விடியோ கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அதன் உரிமையாளா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

ஒசூா், மோரனப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா் 20 ஆண்டுகளாக புகைப்படம்- விடியோ எடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில் திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு விடியோ கேமராவுடன் பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்து புறப்படுவதற்கு சற்று தாமதமாகும் என்று நடத்துநா் கூறியதால் வேறு பேருந்துக்கு செல்ல முயன்றபோது விடியோ கேமரா காணாமல் போனது தெரியவந்தது.

இந்த திருட்டு குறித்து ஒசூா் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT