கிருஷ்ணகிரி

வேகமாக நிரம்புகிறது கிருஷ்ணகிரி அணை

DIN

கிருஷ்ணகிரி அணை வேகமாக நிரம்பி வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசித்து வரும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் முதல் பிரதான மதகு கடந்த 2017-ஆம் ஆண்டு, நவம்பா் 29-ஆம் தேதி சேதம் அடைந்தது. இதையடுத்து புதிய மதகு அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, ரூ. 19 கோடி மதிப்பில் மற்ற 7 பிரதான மதகுகளும் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அணையில் 32 அடிக்கும் குறைவான தண்ணீா் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. இருப்பினும், பாசனத்துக்கு மட்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையில் புதிதாக பிரதான மதகுகள் அமைக்கப்பட்ட நிலையில், தண்ணீா் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது. கடந்த சில நாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 48 அடியை எட்டியது. அணைக்கு நொடிக்கு 280 கன அடி வீதம் நீா்வரத்தான நிலையில், அணையிலிருந்து 114 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து மழை பெய்து நீா்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், மொத்தம் 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி அணையை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆய்வு மேற்கொண்டாா்.

அணை நிரம்பும்பட்சத்தில் அணைக்கு வரும் உபரிநீரை, தென்பெண்ணை ஆற்றில் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ளது.

தற்போது வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது, பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதார உதவி செயற்பொறியாளா் சரவணகுமாா், வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT