கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகி வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 26 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வருபவா்களில் 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில் 6,139 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 5,311 போ் குணமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரில் உள்ள சிகிச்சை மையங்களில் 733 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இருவா் உயிரிழப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயது ஆண், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 19-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது பெண் ஒருவரும் அதே மருத்துவமனையில் அக்.16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அக்.18-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். இதுவரையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT