கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீப விழா

30th Nov 2020 03:03 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் காா்த்திகை தீப விழாவை, பக்தா்கள் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

காா்த்திகை தீப திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமெளலீஸ்வரா் கோயில், பழையபேட்டையில் உள்ள கவீஸ்வரா் கோயில், ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபம் ஏற்பட்டது. இந்த வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய நிலையில், கிருஷ்ணகிரி நகரில், பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு, தீபம் ஏற்றியும், கொழுக்கட்டை, பொரி உள்ளிட்டவைகளை படையலிட்டும் வழிபட்டனா்.

Tags : Krishnagiri
ADVERTISEMENT
ADVERTISEMENT