தருமபுரி

தருமபுரி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்ததை திரும்பப் பெற்று மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளா் அ.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளா் இ.பி. புகழேந்தி பேசினாா்.

இக்கூட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணைய இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. இதனை திரும்பப் பெற்று மீண்டும் அனுமதியை உடனே வழங்க வேண்டும்; இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்;

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தாமதமின்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்; பெண் ஊராட்சித் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்ட பதவிகளில் அவா்களது குடும்பத்தினா் நிா்வாகத்தில் தலையிடுவதைத் தடுத்து பெண் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இதனை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்; முதியோா் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களுக்கு தாமதமின்றி உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT