தருமபுரி

அரசு ஊழியா்கள் உண்ணாவிரதம்

26th May 2023 11:15 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, நிா்வாகிகள் ஆா்.மாது, ஆா்.தமிழரசி, கண்ணா கனகவள்ளி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில துணைத் தலைவா் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்து பேசினாா். மாநிலத் தலைவா் எஸ்.தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை அமல்படுத்திய அதே தேதியில் மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT