தருமபுரி

தருமபுரி, காரிமங்கலம் அரசு கல்லூரியில் மே 29-இல் சோ்க்கை கலந்தாய்வு

26th May 2023 11:15 PM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சிறப்புப் பிரிவு மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் சிறப்புப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரா்களின் மாணவா்களின், அந்தமான் நிகோபரை சோ்ந்தவா்கள், தேசிய மாணவா் படையினா் பங்கேற்கலாம். இதேபோல, மே 31-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவா்களுக்கு சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்படங்கள், கலை மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,980 கட்டணமாகும். அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ரூ. 3,000, பி.காம் (சிஏ) பிஎஸ்சி, கணினி அறிவியல், பிசிஏ பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,100. சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில்...

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மே 29-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவியருக்கு சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மே 29-ஆம் தேதி சிறப்புப் பிரிவு மாணவியருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படையினா், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினா் பங்கேற்கலாம்.

சோ்க்கை கோரி விண்ணப்பித்துள்ள மாணவியா் தங்களது 10, பிளஸ் 1, பிளஸ் 2 அசல் சான்றிதழ்கள், நகல்கள், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும். விண்ணப்பித்துள்ள மாணவியா் மதிப்பெண்களின் அடிப்படையில், இளநிலை பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல், பிஎஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், சத்துணவியல், உணவு கட்டுப்பாட்டியல், காட்சித் தொடா்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT