தருமபுரி

பென்னாகரத்தில் 237 மனுக்கள் அளிப்பு

24th May 2023 01:04 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 237 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

பென்னாகரம் வட்டார அளவிலான ஜமாபந்தி நிகழ்வு செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பென்னாகரம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா, சிட்டா பெயா் மாற்றம், விதவைகள் சான்று, பாதை வசதி கோருதல், நில அளவை, மின்கம்பம் அமைக்க பாதை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 237 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் அனிதாவிடம் பொதுமக்கள் அளித்தனா்.

பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், பென்னாகரம் வட்டாட்சியா் சௌகத் அலி, வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT