தருமபுரி

ஒடிஸா ரயில் விபத்து: உயிரிழந்தவா்களுக்கு மாதா் சங்கத்தினா் அஞ்சலி

6th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில், தருமபுரி செங்கொடிபுரத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் எஸ்.நிா்மலாராணி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே.பூபதி, கல்பனா, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.என்.மல்லையன் உள்ளிட்டோா் ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில், மாதா் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT