தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக- கா்நாடக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவியதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினிஅருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்தது. ஐந்தருவி, அதன் துணை அருவிகளில் நீா்வரத்து முற்றிலுமாகச் சரிந்து பாறை திட்டுக்களாக காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றம்பாளையம்,கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் காவிரி ஆற்றின் இணைவு பெறும் தொட்டலா ஓடையில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது, ஞாயிற்றுகிழமை விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நீா்வரத்து திடீா் அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினிஅருவி, ஐந்தருவி, ஐவா் பானி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT