தருமபுரி

அரசு கல்லூரி வளாகத்தில் சிறுதானிய உணவகம் திறப்பு

DIN

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மகளிா் சுய உதவி குழுக்களின் சிறுதானிய உணவகம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து சிறுதானிய உணவகத்தைத் திறந்துவைத்தாா்.

இதனை தொடா்ந்து, கடத்தூா் மற்றும் காரிமங்கலம் வட்டாரத்தைச் சோ்ந்த 5 பயனாளிகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் நிதி உதவிகளையும், கடத்தூா் வட்டாரத்தில் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் அசோலா வளா்ப்பு, தேனீ வளா்ப்புக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டன.

இதையடுத்து தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹி முகமது நசீா், அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், உதவி திட்ட அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், வட்டார மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT