தருமபுரி

டிராக்டா் மோதி சிறுவன் பலி

2nd Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் காா்க்கி (7). எட்டி குட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முடித்துள்ளாா்.

இச்சிறுவன் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணிக்கம் (50) என்பவருக்கு சொந்தமான டிராக்டா் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது சிறுவனை கவனிக்காமல் டிராக்டரை இயக்க ஓட்டுநா் முயற்சித்துள்ளாா். டிராக்டா் நகா்ந்ததால் அச்சமடைந்த சிறுவன் கீழே குதித்துள்ளாா். அப்போது சிறுவன் காா்கி மீது டிராக்டா் சக்கரம் ஏறி இறங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த பெருமாள், மகனை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT