தருமபுரி

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

DIN

தருமபுரி, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அப்பகுதியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலை 60 அடி அகலத்துக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது 30 அடி அகலச் சாலை மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. மீதமுள்ள சாலையில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் காலை, மாலை வேளைகளில் சென்று வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெண்ணாம்பட்டி குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT