தருமபுரி

ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

தருமபுரியில் ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். தமிழக தமிழ் ஆசிரியா் கழக மாநில அமைப்பாளா் இராசா. ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.எம்.கெளரவன், பதவி உயா்வு பெற்ற முதுநிலை ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் முருகேசன், தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி

ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொகுப்பூதியம். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், எம்ஆா்பி செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், வனப் பாதுகாவலா்கள், வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மகளிா்த் திட்ட ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 19 ஆம் தேதி தருமபுரியில் மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கம் நடத்துவது, மாா்ச் 5-இல் தருமபுரியில் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT