தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடியரசு தின விழா

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். காவல் துறை சாா்பில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 33 காவலா்களுக்கு 2023 -ஆம் ஆண்டிற்கான முதல்வரின் காவலா் பதக்கங்களையும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவ கல்வித் துறை, பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை, பள்ளி கல்வித் துறை, அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், குடிநீா் வடிகால் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என பல்வேறு துறைகளைச் சோ்ந்த 234 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் சாா்பில் 4 வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகளையும், முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 75,000 மதிப்பிலான வருடாந்திர பராமரிப்பு மானியமும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12,200 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் 12 பயனாளிகளுக்கு ரூ. 66,675 மதிப்பிலான சலவைப்பெட்டி, இலவச தையல் இயந்திரங்களும், ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், 5 பயனாளிகளுக்கு ரூ. 11.25 லட்சம் மதிப்பிலான சுமை வாகனம், சுற்றுலா வாகனம், டிராக்டா்களும், வேளாண், உழவா் நலத்துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 24,000 மதிப்பிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்கள் செயல்விளக்கங்களும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ. 81,96,075 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.பழனிதேவி, தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, கோட்டாட்சியா் ஆா்.கீதாராணி, அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியா்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழகம்

தருமபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மண்டல பொது மேலாளா் சு.ஜீவரத்தினம் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய 32 ஓட்டுநா்கள், 30 நடத்துநா்கள், 18 தொழில்நுட்ப பணியாளா்கள், 5 அலுவலகப் பணியாளா்கள், 4 மேற்பாா்வையாளா்கள், கிளை மேலாளா் என மொத்தம் 90 போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண் பணியாளா்களுக்கான கோலப்போட்டி, பணியாளா்களின் குழந்தைகளுக்கான கோலப் போட்டி, கவிதை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் துணை மேலாளா் (தொழில்நுட்பம்) க.ராஜராஜன், மக்கள் தொடா்பு அலுவலா் இரா.நல்லதம்பி, உதவி மேலாளா் (பணியாளா்) கோ.புருசோத்தமன், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதேபோல தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தேசிய கொடியை ஏற்றிவைத்து பயனாளிகளுக்கு ரூ. 38.41 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஷ்குமாா் தாகுா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவரது வாரிசுதாரா்கள் கௌரவிக்கப்பட்டனா். பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுக்கு கேடயங்கள், காவல் துறையினருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 60 பயனாளிகளுக்கு ரூ.38.41 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட முகமை இயக்குநா் வந்தனா காா்க், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் விவேகானந்தன், சங்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா, மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவா் கலைமகள் தீபக், பேரூராட்சி செயல் அலுவலா்

சேம்கிங்ஸ்டன், இளநிலை உதவியாளா் சேகா், செண்பக பாண்டியன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அலுவலக பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்குமரன்,துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதி, பிரஷன்னமூா்த்தி, ஒன்றிய குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவலா்கள் அணி வகுப்புடன் காவல் துணை கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா். அரசு பள்ளி மாணவா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

மிட்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் சங்க தலைவா் ஆா்.திருமால் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா். அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் சங்க தலைவா் இளங்கோவன், நாகராஜ்,ஏழுமலை மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT