தருமபுரி

ஒகேனக்கல்லில் ஏஐடியுசி மசாஜ் தொழிலாளா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம்

DIN

ஒகேனக்கல்லில் ஏஐடியூசி மசாஜ் தொழிலாளா் சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் அருகே சிறுவா் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஏஐடியுசி மசாஜ் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம.மாதேஷ் தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏவுமான ந.நஞ்சப்பன் கலந்துகொண்டு சங்கக் கொடியை ஏற்றியும், மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன் சங்க பெயா் பலகையை திறந்து வைத்தும் பேசினா்.

இக்கூட்டத்தில் மசாஜ் தொழிலாளா்களை சுகாதார தொழிலாளா்களாக மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும், அவா்களின் குழந்தைகளுக்கு உயா்கல்வி வரை உதவித் தொகையுடன் கூடிய இலவச கல்வி வழங்க வேண்டும், அடையாள அட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும், அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும், கரோனா கால நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ. 7,500 வழங்க வேண்டும், அனைவரையும் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கலைசெல்வம், துணைச் செயலாளா் எம்.மாதேஸ்வரன், பொருளாளா் வழக்குரைஞா் சி.மாதையன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT