தருமபுரி

சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஒப்பந்த முறைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் சி.முரளி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சி.நாகராஜன், மாவட்ட ச் செயலாளா் பி.ஜீவா, மாநிலக் குழு உறுப்பினா் சி.கலாவதி ஆகியோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.

இதில், ரயில்வே, மின்சாரம், போக்குவரத்து, அரசு கேபிள் டிவி, குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுப் பணிகளில் சி மற்றும் டி பிரிவுகளில் புதிதாக ஆள்கள் தோ்வுக்கு தடையாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை 115-ஐ திரும்பப் பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகள் 152, 10, 139 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முறைசாரா தொழிலாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பணப் பலன்களையும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT