தருமபுரி

பாப்பாரப்பட்டி வாரச் சந்தையில் கடைகள் கட்டும் பணி தொடக்கம்

DIN

பாப்பாரப்பட்டி வாரச் சந்தையில் புதிய கடைகள் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள வாரச்சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் பயிா் செய்யும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனா். வாரச்சந்தையில் போதுமான கடை வசதி இல்லாததால், பேரூராட்சியின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாரச்சந்தை புதிய கடைகள் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் பிருந்தா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் கோமதி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், தருமபுரி முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான தடங்கம் பெ.சுப்பிரமணி கலந்துகொண்டு, வாரச்சந்தை வளாகத்தில் ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் அமைப்பதற்கான பூமிபூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.

இதில், பேரூராட்சி துணைத் தலைவா் மல்லிகா, நகரச் செயலாளா் சண்முகம், இளநிலை பொறியாளா் பழனி, சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT