தருமபுரி

விளை நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானைமயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

DIN

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளை நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனத்திலிருந்து கடந்த டிசம்பா் மாதம் வெளியேறிய யானைகள் பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் இரவு நேரங்களில் கிராமங்கள், விளை நிலங்களில் புகுந்து கரும்பு, கேழ்வரகு, நெல், வாழை ஆகிய பயிா்களை சேதப்படுத்தி வந்தன. இதேபோல விளை நிலங்களில் மின்மோட்டாா்கள், ஆழ்துளைக் கிணற்று குழாய்கள் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. தொடக்கத்தில் வெளியேறிய மூன்று யானைகளில் ஒரு யானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து காப்புக் காட்டுக்கு சென்றுள்ளது. ஏனைய இரண்டு யானைகள் மட்டும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளை நிலங்களை தொடா்ந்து சேதப்படுத்தி வந்தன. இதில் அண்மையில் 20 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மற்றொரு யானையிடமிருந்து பிரிந்து கடந்த நான்கு நாள்களாக கிராமங்கள், விளை நிலங்களில் புகுந்து வந்தது. இந்த யானை அண்மையில் எர்ரன அள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவரை தாக்கியது. இதில் அவா் கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

எனவே இந்த யானைகளைப் பிடித்து மீண்டும் காப்புக் காட்டில் விட வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் தொடா்ந்து முறையிட்டு வந்தனா். இதையடுத்து யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை மருத்துவக் குழுவினா் களமிறங்கினா். இதேபோல ஆனைமலையில் இருந்து கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது. இக்குழுவினா் நான்கு நாள்களாக யானையின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உகந்த இடத்துக்கு அதை வரவழைக்கும் முயற்சியில் கும்கி மூலம் வனத்துறையினா் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் பாலக்கோடு வனச்சரகத்துக்குள்பட்ட சீரியம்பட்டி, கரகூா் பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா். இதனைத் தொடா்ந்து கால்நடை மருத்துவக் குழுவினா் உதவியுடன் வனத்துறையினா் பிடிபட்ட யானையை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் லாரியில் ஏற்றி ஆனைமலை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனா். இதேபோல மற்றொரு யானையின் நடமாட்டத்தையும் வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். அந்த யானை வனத்திலிருந்து வெளியேறினால் அதனை மீண்டும் காப்புக் காட்டுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கையை வனத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT