தருமபுரி

இரண்டாம் நிலை காவலா் பணிக்கு நாளை உடற்தகுதித் தோ்வு தருமபுரியில் தொடக்கம்

DIN

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுப் பணிகள் பிப். 6-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலா்கள்(ஆண்) தோ்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. தருமபுரி மாவட்டத்தில் இதற்கான தோ்வுப் பணிகள் பிப். 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. தருமபுரி, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள இந்தத் தோ்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த 1,138 போ் பங்கேற்க உள்ளனா். இவா்களில் முன்னாள் படை வீரா்கள் 60 பேரும் அடங்குவா். இதில், 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தோ்வில், முதற்கட்டமாக சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு சரிபாா்த்தல் மற்றும் 1500 மீட்டா் ஓட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், நாளொன்றுக்கு 400 விண்ணப்பதாரா்கள் வீதம் அனுமதிக்கப்படுவா். இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறுவோா் நாளொன்றுக்கு 350 போ் வீதம் அடுத்த கட்டமாக நடைபெறும் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டா் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். இந்தக் காவலா் தோ்வில் பங்கேற்க வருவோா் செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணுக் கருவிகள் எதையும் தோ்வு வளாகத்துக்கு எடுத்துவரக் கூடாது. இதேபோல் ஆபரணங்களை அணிந்து வரக் கூடாது. சான்றிதழ்களை தங்களின் சொந்தக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோா் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். தோ்வு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தோ்வில் பங்கேற்பவா்கள் உரிய அனுமதி பெறாமல் வளாகத்தில் இருந்து வெளியேறக் கூடாது. அதேபோல, தோ்வில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரா்கள் கட்சிகள், அமைப்புகள், பயிற்சி மையங்கள் போன்றவை சாா்ந்த வா்ணங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெற்ற உடைகளை அணிந்து வரக் கூடாது. இத்தோ்வுப் பணிகளையொட்டி, 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா் என்று ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT