தருமபுரி

பென்னாகரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சாா்பில் பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைப்புக்கு கண்டனம்; வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 80 சதவீதத்திற்கும் குறைவான திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கும் ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய ஊதியத்தை உயா்த்த வேண்டும்; அனைத்து பொது கட்டடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தனியாா் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா் என்பவை உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கரூரான், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஜீவானந்தம், ஒன்றியத் தலைவா் சக்திவேல், மாவட்டத் துணைத் தலைவா் பி.கே. மாரியப்பன், சின்னம்பள்ளி பகுதி சின்னமாது, தருமபுரி பகுதி குழு செயலாளா் சுசீலா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT