தருமபுரி

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 04:08 AM

ADVERTISEMENT

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜி.மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட துணைச் செயலாளா் ஜி.பச்சாகவுண்டா், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி.ராஜகோபால், என்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், வீடு இல்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டித் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீா்த் திட்டத்தில் போதிய அளவிலான குடிநீா் வழங்க வேண்டும். முதியோா் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் சாா்ந்த நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT