தருமபுரி

வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் 37 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிக்கனஅள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை, ஆட்சியா் கி.சாந்தி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் 37 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றன.

இத் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மூலம் 904 செல்லப் பிராணிகளான நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதுபோல வெறிநோய் பாதிப்பு அறிகுறிகள், அவற்றை தடுக்க, தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் குறித்த விவரங்கள், விளக்கம் செல்லப் பிராணிகள் வளா்ப்போருக்கு எடுத்துரைக்கப்பட்டன.

முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ர.சுவாமிநாதன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்) வி.குணசேகரன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT