தருமபுரி

சரக அளவிலான விளையாட்டுப் போட்டி:ஸ்ரீராம் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

30th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

 

அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கம்பைநல்லூா், ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அரூா் சிறு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், 14 வயது பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் தி.லாராஸ்ரீ, சி.பிரணவ் ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

மாணவி எஸ்.இனியா 100 மீ. ஓட்டத்தில் இரண்டாமிடமும், 400 மீ. ஓட்டத்தில் ஜெ.பிரவினா இரண்டாமிடமும், தடை தாண்டும் ஓட்டத்தில் க.மோனிஷா முதலிடமும், எஸ்.டி.விவீன்குமாா் இரண்டாம் இடமும், வட்டு எறிதலில் பி.ரவினா முதலிடமும், 400 மீ.ஓட்டத்தில் கே.பிரித்தி மூன்றாம் இடமும், 100 மீ.ஓட்டத்தில் டி.அக்ஷிதா முதலிடமும், ஈட்டி எறிதலில் ர.ராகேஷ் இரண்டாம் இடமும், உயரம் தாண்டுதலில் மு.பிரவீன் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனா். 14 வயது பிரிவு மகளிா் கைப்பந்து, பூப்பந்து போட்டியில் முதலிடமும் பெற்றனா்.

ADVERTISEMENT

மேசை பந்து: 14 வயது மகளிா் பிரிவு மேசை பந்தாட்டத்தில் ஒற்றையா், இரட்டையா் பிரிவில் முதலிடமும், 17 வயது இரட்டையா் பிரிவில் முதலிடமும், ஒற்றையா் பிரிவில் இரண்டாமிடமும், 14 வயது மாணவா்களுக்கான இரட்டையா் பிரிவில் முதலிடமும், 17, 19 வயதுக்கு உள்பட்ட ஒற்றையா், இரட்டையா் பிரிவில் முதலிடமும் பெற்றனா்.

இதையடுத்து, மேசை பந்தாட்டத்தில் இப் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். மகளிா் இறகுபந்துப் போட்டியில் 14, 19 வயது பிரிவில் ஒற்றையா், இரட்டையா் பிரிவில் முதலிடமும், 14 வயது மாணவா்களுக்கான இறகுபந்து போட்டியில் ஒற்றையா், இரட்டையா் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனா்.

குழுப் போட்டியில் முதலிடமும், தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ்குமாா், விக்னேஷ்குமாா் ஆகியோரை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம், பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT