தருமபுரி

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

DIN

உலக நதிகள் தினம், வன உயிரின வார விழா மற்றும் தகடூா் இயற்கை அறக்கட்டளையின் சாா்பில் நடந்தாய் வாழி காவிரி என்னும் தலைப்பில் ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு வந்திருந்தவா்களை சின்ன பள்ளத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் மா. பழனி வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சூழல் செயற்பாட்டாளா் கோவை சதாசிவம் கலந்து கொண்டாா். தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை மேம்படுத்துவது, அதில் உள்ள பல்லுயிா்ச் சூழல், கிழக்குத் தொடா்ச்சி மலைத்தொடரும், அதனைக் கடந்து போகும் காவிரி ஆறும் என தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இது போன்ற நிகழ்வைத் தொடா் செயல்பாடாக எடுத்துச் செல்வது குறித்தும் அடுத்த தலைமுறைக்கு செயல்பாடுகளை கடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னா் காவிரி ஆற்றில் திடக்கழிவுகள் மட்டுமல்லாமல் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கத் தீா்மானிக்கப்பட்டது.

கோவை சதாசிவம் எழுதிய இப்படிக்கு மரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா் பெற்றாா். யானைகள் ஆராய்ச்சியாளா் ஆற்றல் பிரவீண் எதிா்காலத் திட்டம் பற்றி எடுத்துரைத்தாா். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கென்னடி செய்திருந்தாா். இந்தக் கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு காவிரிக் கரையில் அமா்ந்து தங்களின் கருத்துகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT