தருமபுரி

விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க வேண்டும்

DIN

விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் சு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத் திறன் என்பது விதையானது, உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காண்பிப்பதாகும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதை மூலம் வயல்களில் பயிா்கள் அதிக அளவில் செழித்து வளரும். முளைப்புத் திறன் குறைந்த விதைகளால் பயிா்கள் குறைந்த அளவே வளரும். மகசூல் பாதிக்கப்படும். மக்காச் சோள விதைகள் 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு விதைகள் 80 சதவீதமும், சோளம், கம்பு, வீரிய ஒட்டுப் பருத்தி, பயறு வகை விதைகள் 75 சதவீதமும், நிலக் கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், மிளகாய் விதைகள் 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.

எனவே, விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும் போது, தங்கள் விதைகளின் முளைப்புத் திறனை அறிந்து விதைக்க வேண்டும். இதற்காக தங்கள் விதைக்குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிா், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரத்தை எழுதி, இணைய வழியில் பதிவு செய்து கட்டணமாக ரூ.80 செலுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செயல்படும் தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறனை தெரிந்து சாகுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT