தருமபுரி

இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் கற்றல் திறன் மேம்படுகிறதுஆட்சியா் கி.சாந்தி

DIN

இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவா்களுக்கு கல்வித் திறன் மேம்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் ஏர்ரஅள்ளி, அதியமான்கோட்டை ஊராட்சியில் தேவரசம்பட்டி ஆகிய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மையங்களில் ஆட்சியா் கி.சாந்தி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தருமபுரி ஒன்றியம்- 560 தொடக்க நிலை மையங்கள், 387 உயா் தொடக்க நிலை மையங்கள் என மொத்தம் 947 குடியிருப்பு பகுதி மையங்களில் 14,929 மாணவ,மாணவியா்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

அதுபோல நல்லம்பள்ளி ஒன்றியம்- 682 தொடக்க நிலை மையங்கள், 389 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 1071 குடியிருப்பு பகுதி மையங்களில் 15,579 பேருக்கும், பென்னாகரம் ஒன்றியம்- 661 தொடக்க நிலை மையங்கள், 548 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 1,209 குடியிருப்பு பகுதி மையங்களில் 18,508 பேருக்கு, பாலக்கோடு ஒன்றியம்- 530 தொடக்க நிலை மையங்கள், 411 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 941 குடியிருப்பு பகுதி மையங்களில் 14,344 பேருக்கும், காரிமங்கலம் ஒன்றியம்- 524 தொடக்க நிலை மையங்கள், 345 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 869 குடியிருப்பு பகுதி மையங்களில் 11,810 பேருக்கும், மொரப்பூா் ஒன்றியத்தில் 523 தொடக்க நிலை மையங்கள், 329 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 852 குடியிருப்பு பகுதி மையங்களில் 11,281 பேருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

அதுபோல பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்-310 தொடக்க நிலை மையங்கள், 163 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 473 குடியிருப்பு பகுதி மையங்களில் 7,165 பேருக்கும், அரூா் ஒன்றியத்தில் 524 தொடக்க நிலை மையங்கள், 350 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 874 குடியிருப்பு பகுதி மையங்களில் 12,169 பேருக்கும் ஆக மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் 4,314 தொடக்க நிலை மையங்கள், 2,922 உயா் தொடக்க நிலை மையங்கள், மொத்தம் 7,236 குடியிருப்பு பகுதிகளில் 1,05,745 பேரு இலவசமாக பாடங்கள் தன்னாா்வலா்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இப் பணிகளில் ஈடுபடும் 7,236 தன்னாா்வலா்களுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் நவம்பா் மாதம் வரை ரூ. 6.06 கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால் பள்ளி மாணவ, மாணவியா்களின் கற்றல் திறன் மேம்பட்டு வருகிறது. தன்னாா்வலா்கள் தொடா்ந்து இக் குழந்தைகளுக்கு சிறப்பாக பாடங்களைக் கற்பித்திட வேண்டும் என்றாா். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கு.குணசேகரன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா் ராஜகோபால், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT