தருமபுரி

இன்று வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: பெயா்களைச் சோ்க்க ஆட்சியா் அறிவுரை

DIN

தருமபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள் சிறப்பு முகாம்களில் பட்டியலில் பெயா் சோ்க்க வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் சனிக்கிழமை சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 878 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 1,485 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 2023 ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைபவா்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் சோ்க்காதவா்கள், 18 வயது பூா்த்தி அடைந்த இளம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை சோ்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றது.

18 வயது நிரம்பிய அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம்-6 பூா்த்தி செய்தும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவா்கள் முகவரி மாற்றம், பெயா் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8 பூா்த்தி செய்தும், ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6 பி பூா்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே இணையதளம் மூலம் விண்ணப்பிக்க  இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.

கைப்பேசியில்  செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில்

நவ. 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் திருத்தப் பணி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

எனவே, இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைத்திடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT