தருமபுரி

ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

DIN

ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 5-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

கா்நாடக மாநிலம், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதி, தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த தொடா் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை மாலை நொடிக்கு 20,000 கன அடியாகக் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் நீா்வரத்து 16,000 கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கியிருந்த பாறைகள் முற்றிலுமாக வெளியே தெரிகின்றன.

சுற்றுலா வாகனங்களைத் திருப்பி அனுப்பிய போலீஸாா்:

அண்மையில் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 50,000 கனஅடியாக இருந்த போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் கடந்த புதன்கிழமைமுதல் தடை விதித்திருந்தது. இந்தத் தடை உத்தரவு 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல் நோக்கி பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். ஆனால் போக்குவரத்து போலீஸாா் பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT