தருமபுரி

தருமபுரியில் மாா்ச் 24-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

21st Mar 2022 11:26 PM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 24-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம் முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், பட்டயம், ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், மருத்துவம் சாா்ந்த படிப்புகள் (செவிலிய உதவியாளா், மருந்தாளுநா்), தையல் பயிற்சி உள்பட்ட பல்வேறு திறன் பயிற்சி பெற்றவா்களும் கலந்துகொண்டு பணி வாய்ப்பைப் பெறலாம்.

ADVERTISEMENT

தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, ஒசூா் மற்றும் சென்னையை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. வேலையளிக்கும் நிறுவனங்களும் வேலைநாடுநா்களும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவரங்களுக்கு 04342-296 188 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT